செம்மணி அகழ்வு பணிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்!

செம்மணி மனித புதைக்குழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று (12.02) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

விசாரணையின் போது, புதைகுழி பகுதிக்கு அருகிலுள்ள இடங்களை வாரத்தில் இரண்டு நாட்கள் சட்ட வைத்திய அதிகாரியின் கண்காணிப்பில் சுத்தம் செய்யுமாறு நல்லூர் பிரதேச சபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், புயல் மற்றும் மழையால் சேதமடைந்த தற்காலிக கொட்டகைகளை அகற்றி புதிய வசதிகள் ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, புதைகுழிக்குள் நீர் தேங்கி இருப்பதால், எதிர்வரும் 28ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரியின் கண்காணிப்பில் நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. வழக்கு மீண்டும் ஏப்ரல் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version