பணமோசடியில் ஈடுப்பட்ட மன்னார் பெண் கைது!

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கிட்டத்தட்ட 360 பவுன் தங்க நகைகளை அடகு வைத்து விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், மன்னாரைச் சேர்ந்த 66 வயது பெண் ஒருவர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

2019 மற்றும் 2023 க்கு இடையில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரால் சட்டவிரோதமான வருமானத்தின் மூலம் இந்த நகைகள் பெறப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version