விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், புதன்கிழமைகளில் கல்வி நிறுவனங்களிலும் தனியார் நிலையங்களிலும் கூடுதல் வகுப்புகள் நடத்தப்படக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது போதுமான எரிபொருள் கையிருப்பு நிலவினாலும், எதிர்காலத்தில் உருவாகக்கூடிய சவால்களை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.