போலியான சமூக வலைத்தள பதிவுகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

“இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் விழிப்புணர்வு” என்ற தலைப்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான பதிவுகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் பொலிஸ் ஊடகப் பிரிவின் அதிகாரப்பூர்வ வெளியீடுகள் மூலமே வெளியிடப்படுகின்றன எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொய்யான தகவல்களை பகிர்பவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும், உண்மையான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ வழிகளையே நம்புமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Social Share

Leave a Reply