சட்டத்தை மீறும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை!

எரிபொருள் விநியோகத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு எதிராக செயல்படும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

மேலும், விதிமுறைகளை மீறும் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனதிற்கு அறிவிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்காக தகவல்களை பெற விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

0112106767 மற்றும் 0117296130 என்ற இலக்கங்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் முறைப்பாடுகளை முன்வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply