அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான விசேஷ பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்க தூதருமான Sergio Gor மற்றும் Anura Kumara Dissanayake ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (19.03) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும், மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமை தொடர்பாக இலங்கையின் நிலைப்பாடு மற்றும் அதனால் நாட்டுக்கு ஏற்படும் சவால்கள் பற்றியும் ஜனாதிபதி விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும, ஜனாதிபதியின் மூத்த பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் Sergio Gor அவர்களுடன் வந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.