எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடிக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று (19.03) சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது, தரமற்ற நிலக்கரி இறக்குமதி மற்றும் குமார ஜயகோடி தனது தற்போதைய அமைச்சர் பதவியை ஏற்பதற்கு முன்பு செய்ததாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையது என தகவல்கள் வெளியாகியுள்ளன.