ஹம்பாந்தோட்டையில் 500 லீட்டர் எரிபொருள் மீட்பு!

ஹம்பாந்தோட்டையின் கட்டுவாவ சல்மல்யாய பகுதியில் பொலிஸார் நடத்திய சோதனையின் போது சுமார் 500 லிட்டர் எரிபொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின்போது, ஒரு வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 480 லிட்டருக்கும் அதிகமான டீசலும், சுமார் 20 லிட்டர் பெட்ரோலும் கண்டெடுக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், பறிமுதல் செய்யப்பட்ட எரிபொருளும் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version