எதிரிகள் எந்த மூலைக்கு சென்றாலும் தேடி அடிப்போம் – ஈரான் எச்சரிக்கை!

ஈரான் தனது எதிரிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பொது இடங்கள் கூட பாதுகாப்பானதாக இருக்காது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகரித்து வரும் பதற்ற நிலைமையின் பின்னணியில், இந்த அறிக்கையை Associated Press ஊடகம் வெளியிட்டுள்ளது.

“பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள இடங்கள், ஈரானுக்கு எதிரானவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்காது” என ஈரான் இராணுவ பேச்சாளர் ஜெனரல் Abolfazl Shekarchi எச்சரித்துள்ளார்.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி,
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதிகாரிகளை உலகின் எந்தப் பகுதியிலும் (போர் நடைபெறாத நாடுகளிலும்) அவர்கள் தனிப்பட்ட பயணங்களில் இருந்தாலும் தேடி தாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் உறுதி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Social Share

Leave a Reply