சட்டவிரோதமாக பெருமளவு டீசலை பதுக்கி வைத்திருந்த நபரை கொட்டாஞ்சேனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ரூ. 600,000 க்கும் அதிக மதிப்புள்ள, 200 லிட்டர் கொண்ட பத்து பேரல்களில் சேமிக்கப்பட்டிருந்த 2,000 லிட்டர் டீசல் இதன்போது பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கொட்டாஞ்சேனை போலீஸ் நிலைய அதிகாரிகள் இரவு ரோந்துப் பணியின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது. ஜார்ஜ் ஆர். டி சில்வா மாவத்தை வழியாக முழுமையாக மூடப்பட்ட லாரியில் சென்ற சந்தேகநபர் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்தபோது, அதன் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த பத்து பேரல்களில் டீசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் நாவலபிட்டி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஒருவர் ஆவார்.