இலங்கை தனது நட்பு நாடு என்றும், எந்நேரமும் இலங்கைக்கு உதவ தயாராக உள்ளதாகவும் இலங்கையிலுள்ள ஈரான் தூதர் அலிரேசா டெல்கோஷ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இலங்கை எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கேட்டால் வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்,
மேலும், ஹோர்முஸ் நீரிணை நட்பு நாடுகளுக்கு மூடப்படவில்லை என்றும், இலங்கை சிக்கலில் சிக்குவதை ஈரான் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், ஈரானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு திரும்பச் செய்ய தேவையான வசதிகளையும் ஏற்படுத்த தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.