தாக்குதல்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால நிறுத்தத்தை மேலும் 10 நாட்களுக்கு நீடிப்பு!

ஈரானின் வலுசக்தி நிலையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால நிறுத்தத்தை மேலும் 10 நாட்களுக்கு, அதாவது ஏப்ரல் 6 வரை நீட்டித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது Iஈரான் அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு, இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரிக்காமல் தடுக்கவும், பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பளிக்கவும் உதவும் என கருதப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தாலும், அதனை தெஹெரான் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply