இலவச சுற்றுலா விசா வழங்கும் இலங்கையின் புதிய திட்டம்!

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் 39 நாடுகளின் பயணிகளுக்கு 6 மாதங்கள் இலவச சுற்றுலா விசா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு 2025 ஜூலை 21 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் சட்ட வரைவு விதிமுறைகள் பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளன.

இந்த முன்மொழிவு பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் Nalinda Jayatissa இன்று (31.03) அறிவித்ததன்படி, அவுஸ்திரேலியா, இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 39 நாடுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை மூலம் அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்த்து, இலங்கையை முன்னணி சுற்றுலா இலக்காக மாற்ற அரசு எதிர்பார்க்கிறது.

Social Share

Leave a Reply