லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் நீடிக்கும் அறுவை சிகிச்சை காத்திருப்பு பட்டியல்!

லேடி ரிட்ஜ்வே குழந்தைகளுக்கான மருத்துவமனையில் மொத்தம் 2,712 குழந்தைகள் அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளனர் என சுகாதார துணை அமைச்சர் ஹன்சக விஜயமுனி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவருடைய கூற்றின்படி,

1,025 குழந்தைகள் இதயம் மற்றும் மார்பு தொடர்பான (Cardiothoracic) அறுவை சிகிச்சைக்காகவும், 593 குழந்தைகள் பொது அறுவை சிகிச்சைக்காகவும், 388 குழந்தைகள் கண் அறுவை அறுவை சிகிச்சைக்காகவும், 266 குழந்தைகள் காது, மூக்கு, தொண்டை (ENT) அறுவை சிகிச்சைக்காகவும், 240 குழந்தைகள் பிளாஸ்டிக் அறுவை அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பதுடன், மேலும் 133 குழந்தைகள் முதுகெலும்பு (Spinal) அறுவை சிகிச்சைக்காகவும்,
48 குழந்தைகள் எலும்பியல் (Orthopaedic) அறுவை சிகிச்சைக்காகவும், 19 குழந்தைகள் நரம்பியல் (Neurosurgery) அறுவை சிகிச்சைக்காகவும் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மொத்தமாக, அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 2,712 ஆக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply