வறட்சி காரணமாக ஹோமாகம உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!

இன்றைய (08.04) இரவு 8.00 மணி முதல் நாளை (09.04) காலை 8.00 மணி வரை, நிலவும் வறட்சி நிலைமையினால் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

ஹோமாகம வீதி (பிடிப்பன சந்தி முதல் கலகேதர வரை) மாவத்தகம, பாதுக்க வீதி (கொடகம முதல் லியன்வலா பாலம் வரை) அதுருகிரிய வீதி (கொடகம முதல் ஹபரகட வரை), தொம்பே, ஹொரகல வீதி மற்றும் மதுலாவ ஹொரகல வீதி, சோமரத்ன மாவத்தை, ஆர்டிகல வீதி, அம்புல்கம வீதி, ரணால ஹபராகட வீதி, மொரகஹஹேன வீதி, புவக்வத்த வீதி.

இந்த காலப்பகுதியில் தங்களின் நீர் தேவைகளை முன்னெச்சரிக்கையாக திட்டமிட்டு பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு NWSDB அறிவுறுத்தியுள்ளது.

Social Share

Leave a Reply