மயிரிழையில் தப்பிய குஜராத் டைட்டன்ஸ்

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று (08.04) IPL இன் 14 ஆவது போட்டியாக டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 1 ஓட்டத்தினால் வெற்றி பெற்று 1 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கப்பிடல்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 210 ஓட்டங்களை பெற்றது. சுப்மன் கில் 70(45) ஓட்டங்களையும், வொஷிங்டன் சுந்தர் 55(32) ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 52(27) ஓட்டங்களையும் பெற்றனர். வொஷிங்டன் சுந்தர் அவரது 1 ஆவது IPL அரைச்சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

பந்துவீச்சில் முகேஷ் குமார் 2 விக்கெட்களையும், லுங்கி ங்கிடி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினர்.

211 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்கு துடுப்பாடிய டெல்லி கப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்களை பெற்றது. இதில் லோகேஷ் ராஹுல் 92(52) ஓட்டங்களையும், டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 41(20) ஓட்டங்களையும், பத்தும் நிஸ்ஸங்க 41(24) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ரஷீத் கான் 3 விக்கெட்களையும், பிரசித் கிரிஷ்ணா 2 விக்கெட்களையும், மொஹமட் சிராஜ் 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த போட்டியின் நாயகனாக ரஷீத் கான் தெரிவு செய்யப்பட்டார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜயண்ட்ஸ் அணிகளுக்கிடையில் IPL இன் 15 ஆவது போட்டியாக கொல்கத்தாவில் இன்று நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply