உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதி திட்டம் தொடர்பில் வெளியான தகவல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது தனித்த சம்பவமல்ல; அது 2017ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்த ஒரு சதித் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பது விசாரணைகளில் வெளியாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

இன்று (09.04) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், இந்த ஆண்டு ஏப்ரல் 21 அன்று நாட்டில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் ஏழாவது ஆண்டு நினைவு நாளாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை அந்த தாக்குதல்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் 12 விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இன்றைய விவாதம் 13ஆவது விவாதமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், தாக்குதல்களுக்கு தொடர்பான பல வழக்குகள் தற்போது நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ளன எனவே அது தொடர்பிலான, சில தகவல்களை இந்நேரத்தில் வெளியிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

எனினும், விசாரணைகள் மூலம் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தனிப்பட்ட சம்பவமாக இல்லாமல், பரந்த சதித் திட்டத்துடன் தொடர்புடைய நிகழ்வுகளின் தொடராக இருப்பது உறுதியாகியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தாக்குதல்களின் பின்னணியில் உள்ள முழு உண்மையை வெளிச்சம் போடவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply