சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறைகளுக்குப் பிறகு போக்குவரத்து சேவைகள் வழக்கமான நிலைக்கு திரும்புவதையடுத்து, நேற்று (16.04) முதல் நாடெங்கிலும் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் அதிகரிக்கப்படுகின்றன.
தனியார் பேருந்து சேவைகள் 50% முதல் 60% வரை இயக்கப்படும் என்றும், இன்று (17.04) அனைத்து சேவைகளும் வழமைக்கு திரும்பும் எனவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், ரயில் சேவைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 120 ரயில் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது,
அலுவலக நேரங்களில் ரயில் சேவைகள் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும், அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு சனிக்கிழமை (18.04) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (19.04) சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.