இந்தியா துணை ஜனாதிபதி இலங்கை விஜயம்!

இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் 2026 ஏப்ரல் 19 முதல் 20 ஆம் திகதி வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்திய துணை ஜனாதிபதி ஒருவரின் இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் முதல் இருதரப்பு விஜயம் இதுவாகும்.
இந்த விஜயத்தின் போது, இந்திய துணை ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களை சந்திக்க உள்ளார்.
மேலும், இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களையும், இந்திய வம்சாவளி சமூக பிரதிநிதிகளையும் அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version