தனியார் வங்கியின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போல போலியாக உருவாக்கப்பட்ட ஒரு இணையதளத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி தொடர்பில், மினுவங்கொடையைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2026 பிப்ரவரி மாதம் 16ம் திகதி வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போதே இது தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டதாக வடமேற்கு மாகாண கணினி குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர், இந்த போலி இணையதளத்தை இயக்கி ரூ. 1,000,024 தொகையை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபர் நேற்று (20.04) கைது செய்யப்பட்டு வரியப்பொல பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் இன்று (21.04) குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கணினி குற்றப்புலனாய்வு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.