பெலியத்தவிலிருந்து மருதானைக்கு சென்று கொண்டிருந்த சாகரிகா ரயில், வாத்துவ ரயில் நிலையம் அருகே தடம் புரண்டதால், இன்று காலை (24.04) கடலோர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கொழும்பிலிருந்து பானதுறை வரையிலும், மாத்தறையிலிருந்து களுத்துறை வரையிலும் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தத் தடம் புரள்வு இரு தண்டவாளங்களையும் தடுத்ததால், கடலோர நெடுந்தூர சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் நடைபெறும் போதிலும், முழுமையான சேவைகள் எப்போது மீள் ஆரம்பிக்கும் என்பது தொடர்பில் இதுவரையில் அறிவிப்பு வெளியாகவில்லை.