தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அமைச்சரவை அனுமதி!

ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை, அரச நிறுவனங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் சுமார் 9,800 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் முன்மொழிவை அங்கீகரித்துள்ளது.

2026 வரவுசெலவுத் திட்டத்தின் 33.11ஆம் இலக்க முன்மொழிவின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட இந்த தீர்மானம், அரச சேவை, மாகாண அரச சேவை, அரசுக் கூட்டுத்தாபனங்கள், சட்டபூர்வ திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் தற்காலிக, நாற்கூலி, மாற்று, ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றி வரும் பெருமளவிலான ஊழியர்களை கருத்தில் கொண்டு இது தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான நடைமுறைகளை விளக்கும் சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது.

நிதி அமைச்சராகவும் செயல்படும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக மற்றும் பொது நிர்வாக அமைச்சரின் கூட்டு முன்மொழிவாக இது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply