புற்றுநோய் தொடர்பில் வெளியான புதிய ஆய்வு முடிவு!

20 முதல் 49 வயதுக்குட்பட்டோரிடையே 11 வகையான புற்றுநோய்கள் அதிகரித்து வருவதாகவும், 50 வயதுக்குட்பட்டோரிடையே இந்த விகிதங்கள் அதிகரிப்பதற்கு உடல் பருமன் ஒரு முக்கியக் காரணமாக விளங்குவதாகவும் ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

அந்த 11 புற்றுநோய்கள் தைராய்டு, மல்டிபிள் மைலோமா, கல்லீரல், சிறுநீரகம், பித்தப்பை, பெருங்குடல், கணையம், கருப்பை உட்சுவர், வாய், மார்பகம் மற்றும் கருப்பைப் புற்றுநோய்கள் ஆக கண்டறியப்பட்டுள்ளன.

வாய் புற்றுநோயைத் தவிர, கண்டறியப்பட்ட இந்த 11 புற்றுநோய்களும் அதிக எடையுடன் தொடர்புடையவை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலைக்கு உடல் பருமன் மட்டுமே முழு காரணம் என்பதற்கு இதுவரையில் விளக்கம் அளிக்கவில்லை என்றும், மேலும் ஆதாரங்கள் தேவைபடுவதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்தாலும், இன்சுலின் மற்றும் அழற்சியின் அளவு அதிகரிப்பதால், அதிக எடை அல்லது உடல் பருமன் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அண்மைய காலங்களில், இளம் வயதினரிடையே குடல் மற்றும் கருப்பைப் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களின் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன.

லண்டனில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (ICR) மற்றும் இம்பீரியல் கல்லூரி லண்டன் ஆகியவற்றின் நிபுணர்கள் இந்த புதிய ஆய்வை மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version