தேசிய மக்கள் சக்தியின் மே தின திட்டம்!

தேசிய மக்கள் சக்தி (NPP) தனது சிரேஷ்ட தலைவர்களின் பங்கேற்புடன் இலங்கையின் 21 முக்கிய நகரங்களில் 21 மே தினப் பேரணிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் அறிக்கையின்படி, கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க, மே 1 ஆம் திகதி காலையில் நுவரெலியாவில் நடைபெறும் மே தினப் பேரணியிலும், அதனைத் தொடர்ந்து பிற்பகலில் மஹரகமவில் நடைபெறும் பேரணியிலும் கலந்துகொள்வார்.

பிரதமர் ஹரினி அமரசூரிய இரத்தினபுரவில் நடைபெறும் மே தினப் பேரணியில் கலந்துகொள்வார் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

JVP இன் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா களுத்துறை, மாத்தறை மற்றும் தங்கல்லையில் நடைபெறும் பேரணிகளில் பங்கேற்பார், அதே நேரத்தில் பிமல் ரத்நாயக்க வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பேரணிகளில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜித் ஹெரத், உள்ளிட்ட பிற தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர்களும் இக்கூட்டங்களில் கலந்துகொள்கின்றனர். லால்காந்த, சுனில் ஹந்துநெத்தி, நளிந்த ஜயதிஸ்ஸ, வசந்த சமரசிங்க, அனுர கருணாதிலக, மற்றும் ஹர்ஷன நாணயக்கார ஆகியோர் நாடு முழுவதிலும் கூடுதலான இடங்களில் மே தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

Social Share

Leave a Reply