சட்டவிரோதமாக கடத்த முயன்ற மஞ்சள் மீட்பு!

இறக்குமதி செய்யப்பட்ட உலர்ந்த மிளகாய்ப் பொதிகளுக்குள் பெருமளவிலான உலர்ந்த மஞ்சளை மறைத்து வைத்து கடத்த முயன்ற இரு வேறு நடவடிக்கைகளை இலங்கை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு நடவடிக்கையில், கண்டியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த சரக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6,600 கிலோ உலர்ந்த மஞ்சளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மற்றுமொரு நடவடிக்கையின்போது, பதுளையைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் ஒருவர் இறக்குமதி செய்த மற்றொரு உலர்ந்த மிளகாய்ப் பொதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7,110 கிலோ உலர்ந்த மஞ்சளையும் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த இரு சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version