இங்கிலாந்து அனுப்புவதாக கூறி மாணவர்களிடம் பணமோசடி செய்த நபர் கைது!

பானந்துறைப் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தின் இயக்குனர் ஒருவர், 21 மாணவர்களுக்கு இங்கிலாந்துக்கு விசாக்கள் வழங்குவதாக கூறி ஏமாற்றி, அவர்களிடம் இருந்து 35.8 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் நேற்று (06.05) கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நபர், பானந்துறைப் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் ஆவார். மாணவர்களுக்கு விசா வழங்காமல் பணத்தை மோசடி செய்தல், முறைகேடாகப் பயன்படுத்துதல் மற்றும் நம்பிக்கை துரோகம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply