”கட்டியெழுப்ப முடியவில்லை எனவே விலகிவிட்டனர்” – அமைச்சர் சுனில் குமார!

விளையாட்டைக் கட்டியெழுப்புவதில் தனது தோல்வியை ஒப்புக்கொண்ட பின்னர், இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் நிர்வாகம் பதவி விலகியதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே செவ்வாய்க்கிழமை (05.05) தெரிவித்தார்.

கடந்த உலகக் கிண்ண போட்டிகளின்போதே அதை உணர்ந்துகொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான அணைத்து காரணிகளையும் கருத்திற்கொண்டு அவர்கள் பதவி விலகினார்கள் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எரன் விக்ரமரத்ன தலைமையில் ஒரு புதிய இலங்கை கிரிக்கெட் உருமாற்றக் குழுவை அரசாங்கம் நியமித்துள்ளதாகவும், விக்ரமரத்ன ஒரு திறமையான நிர்வாகி, ஒரு நல்ல அரசியல்வாதி மற்றும் ஒரு திறமையான கிரிக்கெட் வீரர் என்றும் அவர் விவரித்தார்.

Social Share

Leave a Reply