தேசிய ஜாம்பவான்களான சமிந்த வாஸ் மற்றும் நுவன் சொய்சா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், வளரும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தங்களது சர்வதேச கனவை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில், Karwan CC UAE திறமையாளர் தேடல் போட்டி நேற்று (12.05) அன்று அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பமானது.
கிரிமண்டல மாவத்தையில் உள்ள எஸ்.எல்.எல்.டி.சி மைதானத்தில் நடைபெற்ற தேர்வுப் போட்டிகளின் முதல் நாளில், இந்த இரண்டு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்களும் தங்களது அனுபவத்தைக் களத்தில் வெளிப்படுத்தி, அடுத்த தலைமுறை திறமையாளர்களுக்கு வழிகாட்டுதலையும் உத்வேகத்தையும் அளித்தனர்.
இந்தத் திட்டத்தை கார்வான் கிரிக்கெட் கிளப்பின் நிறுவனர் திரு. பாபர் இக்பால், முதன்மைப் பங்குதாரர் திரு. ஃபர்கான் கலீலுடன் இணைந்து முன்னின்று நடத்துகிறார்.
இலங்கையில் இதன் செயல்பாடுகளை டைவர்சிட்டி மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் இம்பாக்ட் ஸ்ட்ராடஜி லேப்ஸ் ஆகிய நிறுவனங்கள் நிர்வகித்து, இத்திட்டம் சீராக நடைபெறுவதை உறுதி செய்கின்றன.