கிளிநொச்சி – முகமாலை பகுதியில் மனித எச்சங்களும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இன்று (15/12) காலை அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் முன்னிலையில் இன்று காலை அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் தடயவியல் பொலிஸார் உள்ளிட்டோர் இதில் கலந்தகொண்டனர்.
முகமாலை பகுதியிலுள்ள காணியொன்றில் கடந்த 11ஆம் திகதி வெடிபொருட்கள் மற்றும் மனித எச்சங்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில், குறித்த பகுதிக்கு நேற்று (14/12) கள விஜயத்தை மேற்கொண்டிருந்த கிளிநொச்சி நீதவான் எஸ். லெனின்குமார், அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கினார்.
