தேசிய இராணுவ வெற்றி கொண்டாட்டம் நாளை!

யுத்த வெற்றியின் 17ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு நாளை (19.05) பத்தரமுல்லை இராணுவ நினைவிடத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.

இம்முறை முதன்முறையாக வடக்கு, கிழக்கில் உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினரின் உறவினர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் பிரிகேடியர் எஸ்.பி.கொஹோன தெரிவித்துள்ளார்.

இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவுகள் மற்றும் உறவினர்கள் சேர்த்து மொத்தம் 2,769 பேர் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

Social Share

Leave a Reply