விடுதலைப் புலிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து, அதன் சித்தாந்தத்தைப் பாதுகாத்த ஒரு சர்ச்சைக்குரிய உரையைத் தொடர்ந்து, இலங்கைக்குத் திரும்பும்போது தான் கைது நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடலாம் என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அர்ச்சுனா, இலங்கைக்கு வந்தவுடன் தான் “கட்டாயமாகக் கைது செய்யப்படுவேன்” என்று எதிர்பார்ப்பதாகதெரிவித்துள்ளார்.
மேலும், தனது கருத்துக்களும் மறைந்த விடுதலைப் புலிகள் தலைவரைக் குறிப்பிட்டதும் இலங்கைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.