87 கைபேசிகள் உட்பட மேலும் பல பொருட்களுடன் சீன பிரஜைகள் கைது!

சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என சந்தேகிக்கப்படும், ரூ. 5.14 மில்லியன் மதிப்புள்ள 87 கைபேசிகள் மற்றும் 140 மின்கலன்களைக் கடத்த முயன்ற மூன்று சீன நாட்டினரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

அந்தக் கடத்தல் பொருட்கள் பைகள், சாக்லேட்டுகள், பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ஜாக்கெட் மற்றும் காலணிகளின் அடிப்பாகங்களில் மறைத்து கொண்டுவரப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொருட்களை சட்டவிரோதமாகப் கொண்டு செல்ல முயன்றபோது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version