புத்தசாசனம், சமய மற்றும் பண்பாட்டு விவகாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, தேசிய கலைக்கூடத்தில் இருந்த 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
2015ம் ஆண்டு கணக்கெடுப்பில் 281 கலைப்படைப்புகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று 239 மட்டுமே எஞ்சியுள்ளதாகவும், இதுகுறித்து ஒரு குழு முதற்கட்ட விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும், வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.