ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பரக்கா அணுமின் நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆளில்லா விமானத் தாக்குதல் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
அணுசக்தி நிலையங்களுக்கு ஏற்படும் எந்தவொரு சேதமும் பிராந்தியம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..
குறித்த அறிக்கையில், அணுசக்தி உள்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை இலங்கை வலியுறுத்தியுள்ளதுடன், அத்தகைய நிலையங்கள் மீதான தாக்குதல்கள் கடுமையான மனிதாபிமான மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், மோதல்களின் போது பொதுமக்களையும் முக்கிய உள்கட்டமைப்புகளையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சர்வதேச சட்டங்களைக் கடைப்பிடித்து, நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.