தங்க நகை கடன் மற்றும் வாகன லீசிங் தொடர்பில் புதிய கட்டுப்பாடுகள்!

அதன்படி, இன்று (25.05) முதல் தங்க நகைகளை அடைவு வைத்து கடன் பெறுபவர்கள், தங்கத்தின் மொத்த பெறுமதியின் 70 சதவீதம் வரை மட்டுமே கடனாக பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அதிகளவு கடன் பெறும் வசதி காணப்பட்ட நிலையில், புதிய அறிவிப்பு காரணமாக பொதுமக்கள், குறிப்பாக அன்றாட தேவைகளுக்காக தங்க நகைகளை அடைவு வைக்கும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தினருக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.

மேலும், வாகனங்களுக்கு வழங்கப்படும் லீசிங் வசதிகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதிய வாகனங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்டு ஒரு வருடத்திற்குள் உள்ள வாகனங்களுக்கு வழங்கப்படும் லீசிங் தொகை, வாகனத்தின் பெறுமதியின் 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு 50 சதவீதம் வரை லீசிங் வசதி வழங்கப்படும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply