மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் கூடிய காய்ச்சல் பரவும் அபாயம்!

நாட்டின் பல பகுதிகளில் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் கூடிய காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுகாதார பிரதி அமைச்சர் ஹசங்க விஜயமுனி, நோயாளர்கள் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

முதலில் தெனியாய பகுதியில் கண்டறியப்பட்ட இந்த நோய்த்தொற்று, தற்போது ரிபில்லகஸ்கட, தியத்தலாவ மற்றும் கண்டி பகுதிகளிலும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது மூளைக்காய்ச்சல் அறிகுறிகளை வெளிப்படுத்தும் இன்ஃப்ளூயன்ஸா வகை காய்ச்சலாக இருக்கலாம் எனவும், தொடர்புடைய வைரஸ் குறித்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காய்ச்சல், கடும் தலைவலி, வாந்தி, கழுத்து விறைப்பு மற்றும் வெளிச்சத்தை பார்க்க முடியாமை ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும்.

பாதுகாப்பான குடிநீர் பயன்படுத்துதல், முகக்கவசம் அணிதல் மற்றும் மக்கள் நெரிசலான இடங்களை தவிர்த்தல் போன்ற சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

Social Share

Leave a Reply