நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு பருவமழை படிப்படியாக வலுப்பெற்று வருவதால், நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மேலும், ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகலுக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பல பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

மேலும், களுகங்கையை அண்மித்த மில்லகந்த பகுதிக்கான வெள்ள அபாய எச்சரிக்கையும் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version