இனி வாரத்தில் நான்கு நாள் தான் வேலையா?

இலங்கையில் நான்கு நாள் வேலை வார முறைமையை அறிமுகப்படுத்துமாறு பல தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தேசிய தொழில் ஆலோசனைச் சபைக்கு கிடைத்துள்ள இந்தக் கோரிக்கைகள் குறித்து நிறுவனங்களின் தேவைகளுக்கேற்ப ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க தொழில் திணைக்களத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, எரிபொருள் மற்றும் ஆற்றல் சேமிப்பை முன்னிட்டு மீண்டும் ‘வீட்டிலிருந்து வேலை செய்யும்’ முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

எனினும், தற்போதைய நிலவரப்படி அரச அல்லது தனியார் துறைக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை தொடர்பாக எந்த உத்தியோகபூர்வ முடிவும் எடுக்கப்படவில்லை என தொழில் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

Social Share

Leave a Reply