தென்மேற்குப் பருவமழை தற்போது இலங்கையில் நிலைபெற்றுள்ளதால், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தொடர்ச்சியான மழைப்பொழிவு நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது. சில பகுதிகளில் 75 மி.மீ-க்கு மேல் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.