வீதியில் சம்பவ இடத்திலேயே விதிக்கப்படும் போக்குவரத்து அபராதங்களுக்கான கட்டணத்தை GovPay அமைப்பு மூலம் செலுத்துவதற்கான வசதியை செய்து தராத போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதில் ஏற்படும் தாமதங்களால் வாகன ஓட்டிகள் சந்திக்கும் சிரமங்களைக் குறைக்கவும், பொதுமக்களின் நேரத்தையும் பொருளாதாரச் செலவுகளையும் மிச்சப்படுத்தவும் GovPay கட்டண முறை 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது என பொலிஸ் பிரிவின் பிரதி பொலிஸ் தலைவர் (டி.ஐ.ஜி) டபிள்யூ.பி.ஜே. செனதீர தெரிவித்துள்ளார்.