மீகொட பகுதியில் நடைபெற்ற வேசாக் தானசாலைக்குள் ஒரு வாடகை கார் (கேப்) மோதி விபத்துக்குள்ளானதில், 15 வயது சிறுமி உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
42 வயதுடைய கார் சாரதி மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்திற்குப் பிறகு அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தாலும், பின்னர் பொதுமக்கள் மற்றும் பொலிஸாரால் துரத்திச் சென்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவிசாவலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குறித்த வாடகை கார் மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில், வரிசையிலிருந்த 15, 32 மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35 மற்றும் 38 வயதுடைய மூன்று ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.