14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான எரகம பகுதியைச் சேர்ந்த மௌலவி ஒருவர் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்திற்குப் பின்னர் தலைமறைவாக இருந்த அவர், சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாகிய நிலையில், அவரை ஜூன் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையில், சந்தேகநபருக்கு உதவியதாகக் கூறப்படும் 21 வயதுடைய மற்றொரு மௌலவியும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.