QR முறை எரிபொருள் விநியோகம் கடுமையாக்கப்படும்!

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கியூஆர் (QR) முறையானது எதிர்காலத்திலும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இன்று (01.05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் எரிபொருள் நுகர்வை ஓரளவிற்காவது கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், இதன் மூலம் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் ஓரளவிற்காவது தணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version