வவுனியா – நெடுங்கேணி பகுதியில் இன்று (15/12) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவர் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பலத்த காயங்களுக்குள்ளான பெண், சம்பவ இடத்திலயே உயிரிழந்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் நெடுங்கேணி – ஈட்டிமுறிஞ்சான் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
