250Kg ஹெரோயினுடன் பிடிப்பட்ட மீனவப்படகு

இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பிராந்தியத்தில் கடந்த 11ஆம் திகதி 250 கிலோகிராம் ஹெரோயினுடன் கைப்பற்றப்பட்ட மீனவப்படகு ஒன்று இன்று (15/12) காலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, இலங்கையிலிருந்து 900 கடல் மைல் தொலைவில் குறித்த மீனவப்படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த மீனவப்படகில் 6 மீனவர்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

250Kg ஹெரோயினுடன்  பிடிப்பட்ட மீனவப்படகு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version