‘திருமணங்களில் மதுபானத்திற்கு அனுமதி’

நாளை (16/12) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதில் திருமணம் மற்றும் இறுதி சடங்குகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

அத்துடன் புதிய வழிகாட்டுதல்களின் பிரகாரம், பொதுக் கூட்டங்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முன் அனுமதி தேவைப்படுவதுடன், திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகள் தொடர்பான வழிகாட்டுதல்கள் தளர்த்தப்பட்டுள்ளன.

அதன்படி, மண்டபத்தின் வழக்கமான கொள்ளளவில் அதிகபட்சமாக 50 சதவீதம் வரை திருமணங்களை நடத்தலாம் என்பதுடன், மதுபான பயன்பாட்டிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மதுபானமின்றி 200 நபர்களுக்கு கூடாமல் மண்டபத்தின் வழக்கமான கொள்ளளவில் 1/3 என்றளவில் மட்டுமே திருமணங்களை நடாத்த அனுமதிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை மரண வீடுகளில் ஒரு தடவையில் 30 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும்.

'திருமணங்களில் மதுபானத்திற்கு அனுமதி'

Social Share

Leave a Reply