ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் திருகோணமலை மாவட்டத்திற்கு நேற்று (15/12) விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு படகு விபத்தில் சிக்கி; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களை நேரடியாக சந்தித்து அவர் கலந்துரையாடினார்.
அதற்கமைய கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட குறிஞ்சாக்கேணிக்கும், கிண்ணியா நகர சபைக்குட்பட்ட பெரியாற்றுமுனைக்கும் அவர் நேரில் சென்று சந்தித்துரையாடியதோடு, சம்பவம் நடந்த இடத்தையும் பார்வையிட்டார்.
குறித்த விஜயத்தின் போது, கிண்ணியாவின் முன்னாள் நகர சபைத் தலைவரும் வைத்தியருமான ஹில்மி மஹ்ரூப், மூதூர் பிரதேச சபைத் தலைவர் அரூஸ் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் இணைந்துகொண்டனர்.
