எதிர்வரும் வருடம் தோட்டப் பயிர்ச்செய்கைக்காக அனைவருக்கும் தேயிலை செடிகளை இலவசமாக வழங்க பெருந்தோட்ட அமைச்சு தீர்மானித்துள்ளது.
பெருந்தோட்ட அமைச்சரும், அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ரமேஷ் பத்திரண இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் நீர் வழங்கல் திட்டங்களுக்கும் சில நிதி உதவிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ‘கடந்த காலங்களில் இவ்வாறான திட்டங்களுக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டன. ஆனால், அது முறையாக பின்பற்றப்படவில்லை. வெறும் பண விரயம் மட்டுமே செய்யப்பட்டது. இவ்வாறான விடயங்கள் இம்முறை இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது. எனவே, இந்த தேயிலை தோட்டம் சம்ந்தப்பட்ட விடயங்களை சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகாரசபை கண்காணிக்க வேண்டும்’ என்றும் தெரிவித்தார்.