சிறைத்தண்டையில் இருந்து விடுபட பிரான்ஸ் கூறும் வழி

தடுப்பூசி போட்டுக் கொள்ள தயாராக இருந்தால், போலி சுகாதார அட்டைகளை வைத்திருந்து சிக்கியவர்கள் தண்டனையில் இருந்து விடுபடலாமென பிரான்ஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் தற்போது கொரோனாவின் ஐந்தாவது அலை உச்சத்தில் இருப்பதனால், பிரான்ஸ் அரசாங்கம் கடுமையான சுகாதார விதிமுறைகளை விதித்து அதனை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி வருகிறது.

எனினும் அங்குள்ள பொதுமக்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டாது போலி தடுப்பூசி அட்டைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பிரான்ஸ் அரசாங்கம் போலி அட்டைகளை வைத்திருப்பவர்களிடம் 1000 யூரோ அபராதமும், ஒன்றரை வருடங்கள் சிறைத்தண்டனையும் விதித்து வருகிறது.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி நேற்று (15/12) உரையாற்றிய பிரான்ஸ் சுகாதார அமைச்சின் செயலாளர் ஒலிவியர் வேரன், தடுப்பூசி செலுத்த சம்மதிக்கும் பட்சத்தில், சிறையில் அடைக்கப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

சிறைத்தண்டையில் இருந்து விடுபட பிரான்ஸ் கூறும் வழி

Social Share

Leave a Reply