இலங்கையர் மீது இந்தியா குற்றப்பத்திரிகை தாக்கல்

கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி அன்று அரபிக்கடலில் வைத்து மீன்பிடி கப்பலொன்றிலிருந்து கைது செய்யப்பட்ட15 இலங்கையர்களுக்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவிற்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்களை கடத்துதல் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் தமிழீழ விடுதலை புலிகளின் செயற்பாடுகளுக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டதாகவும் கூறி இந்திய தேசிய புலனாய்வு பிரிவு இவர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

இந்நிலையில், 15 பேரும் கைது செய்யப்பட்ட வேளையில், அவர்களது கப்பலிலிருந்து ஏராளமான ஆயுதங்கள், போதைப்பொருட்கள் மற்றும் வெடிப்பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கையர் மீது இந்தியா குற்றப்பத்திரிகை தாக்கல்

Social Share

Leave a Reply